×

3 ஆண்டு தாமதமாகியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்த ஆண்டும் இல்லை

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்றை காரணம் காட்டி 2021-22ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன்பின்னர் இதுவரை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முயற்சி எடுக்கவில்லை. 3 ஆண்டுகள் தாமதமாகியும் இந்த ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 1277 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் பணிகள் நடப்பது சாத்தியமில்லை.

2019 டிசம்பர் 24ல் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ரூ.8,754.23 கோடியில் நடத்துவதற்கும், ரூ.3,941.35 கோடி செலவில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. புதிய அட்டவணையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. ஒட்டுமொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் பணிகளுக்கு அரசுக்கு ரூ.12,000 கோடிக்கு மேல் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 3 ஆண்டு தாமதமாகியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்த ஆண்டும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...